கொழும்பு மேல் நீதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு பிணை வழங்கியது.
அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் தலா 5 லட்சம் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 லட்சம் பெறுமதியான சரீர பிணையிலும் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், பேசுபொருளான மொனார்க் தொடர்மாடி சொகுசு குடியிருப்பை மையப்படுத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்தின் 19 ( உ) பிரிவின் கீழ் முதலாம், 2 ஆம் பிரதிவாதிகளாக முறையே ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன அலோசியஸ் ஆகியோர் பெயரிடப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.