நாட்டில் அனைத்து சமய பாடத்திட்டத்தினை திருத்தியமைக்க பரிந்துரை!

நாட்டில் அனைத்து சமய பாடத்திட்டத்தினை திருத்தியமைக்க பரிந்துரை!

நாட்டில் அனைத்து சமய கல்விகளையும் ”சமய கல்வி” என்ற ஒரு தலைப்பின் கீழ் செயல்படுத்துமாறு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்தப்படும் அனைத்து பௌத்த இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் அறநெறி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் சமய வேறுபாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமய கல்வி என்ற தலைப்பின் கீழ், அனைத்து சமய மாணவர்களுக்கும், சமய கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சமய நடவடிக்கைகள் தொடர்பிலான செயற்பாடுகள் ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

குறித்த அமைச்சு, ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post