கொரோனா மரணங்கள் அதிகரிக்கக் கூடும்? வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை!

கொரோனா மரணங்கள் அதிகரிக்கக் கூடும்? வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை!


நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை எதிர்வரும் சில வாரங்களில் அதிகரிக்க கூடும் ஏற்படும் என அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாடு பூராவும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் கட்டுப்படுத்தலுக்கு அல்லது மரணங்களின் எண்ணிக்கையை தடுப்படுதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் போதுமானதல்ல எனவும் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிடுகிறது.


மேலும், பி.சி.ஆர் பரிசோதனைகளை சரிவர செய்தால் தற்போது காணப்பட்டு வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரிகக்கூடும் என அச்சங்கம் தெரிவிக்கிறது.


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளைக் காட்டிலும், தொடர்ந்தும் உண்மைத் தன்மையை மறைத்தால் வந்தால், நாடென்ற ரீதியில் பாரிய கஷ்டத்துக்குள் விழ வேண்டி வரும் என அரசங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


ஆகையால், இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதாயின் சமூக மற்றும் அரச செயற்திட்டங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.


-எம்.எம்.சில்வெஸ்டர்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.