புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

தற்போது முடக்க நிலையில் காணப்படும் பொகவந்தலாவ − செபல்டன் பெருந்தோட்ட பகுதியின் P.S. பிரிவில் வசிக்கும் 400 நபர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் இருந்து 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

78 வயதான ஒருவர் கொரோனா தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த பிரதேசத்தில் PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பொகவந்தலாவை பகுதியில் இதுவரை 100க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post