ஒரு கிலோ தங்கம் 93 லட்சம்? விளம்பரம் இட்டு பெருந்தொகை பணம் கொள்ளை!

ஒரு கிலோ தங்கம் 93 லட்சம்? விளம்பரம் இட்டு பெருந்தொகை பணம் கொள்ளை!


தங்க நகைகளை விற்பதாகக் கூறி நபர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் குருணாகல் குற்ற விசாரணை பிரிவினரால் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மொரட்டுவை, கடுவலை, ராகம மற்றும் வெயாங்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர். 


மேலும் இவர்களிடமிருந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த 06 சந்தேக நபர்களில் 47 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.


குறித்த பெண் தொலைபேசி ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்க நகைகள் விற்பனைக்கு உள்ளதாகத் தெரிவித்து புகைப்படங்களை அனுப்பி ஏனையோரை தொடர்பு கொண்டுள்ளார். அத்தோடு ஒரு கிலோ தங்கம் 93 இலட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.


இதன்போது நகைகளை கொள்வனவு செய்ய வருபவர்களிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குருநாகல் குற்ற விசாரணைப் பிரிவு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.


-எம்.மனோசித்ரா


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post