64 நாட்களாக முடக்கப்பட்டிருந்த கண்டி - மஹய்யாவ பகுதிகள் மீள் திறப்பு!

64 நாட்களாக முடக்கப்பட்டிருந்த கண்டி - மஹய்யாவ பகுதிகள் மீள் திறப்பு!

கொரொனா தொற்று கண்டி - மஹய்யாவ பகுதியில் வேகமாகப் பரவியதன் காரணமாக கடந்த டிசம்பர் 10ஆம் திகதி முதல் 64 நாட்களாக மூடப்படுடிருந்தன. மக்கள் போக்குவரத்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 

அப்பிரதேச மக்களின் நீண்ட போராட்டத்தையடுத்தும் பிரதேசத்தில் நோய் பரவல் கட்டுப்பாட்டினுள் வந்தததையும் அடுத்தும் சுகாதார அதிகாரிகளால் போக்குவரத்து தடை நீக்கப்பட்டது. 

மஹய்யாவையைச் சேர்ந்த எம்.சி. பிரிவு மற்றும் எம்.டி பிரிவு ஆகிய இரண்டும் கடந்த 64 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்து சிரமத்திற்கு மத்தியில் காணப்பட்டனர். 

சுமார் 2,000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் அடைப்பட்டிருந்தனர். போக்குவரத்து தடை நீக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பொது மக்கள் வரவேற்று உள்ளே அழைப்பதை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

-ஹபீஸ்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.