யாழில் பிறந்த வெறும் 600 கிராம் எடைகொண்ட குழந்தை!

யாழில் பிறந்த வெறும் 600 கிராம் எடைகொண்ட குழந்தை!

யாழில் வெறும் 600 கிராம் எடையுடன் பிறந்த ஒரு குழந்தை மருத்துவர்களின் பெரும் முயற்சியினால் பூரண நலம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பருத்தித்துறையை சேர்ந்த 06 மாதக் கர்ப்பவதித் தாய் ஒருவர் திடீர் பிரசவவலி காரணமாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவர் உடனடியாக குழந்தை பிரசவித்தார். சாதாரண கர்ப்ப காலம் 35 வாரமாகும். எனினும் முன்கூட்டியே, அதாவது 24 ஆவது வாரத்தில் பிறந்த இந்தக் குழந்தையின் நிறை 600 கிராமாக மட்டுமே இருந்துள்ளது.

சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் டீபால் நவரட்ண தலைமையிலான மருத்துவக் குழுவினரின் 04 மாத முயற்சியில் அதாவது 97 நாள்கள் பராமரிப்பில் குழுந்தை பூரண நலமாகத் தேறி தற்போது தாயாருடன் வீடு சென்றுள்ளது.

இது யாழ். போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதலாவது சம்பவமாக பதிவிடப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நீண்டகாலம் சிசு பராமரிப்பு வைத்திய நிபுணர் பதவி வெற்றிடமாக இருந்தது. தற்போது அந்த வெற்றிடம் நிரப்பப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை வழங்கப்படுகின்றது.

அதேநேரம் தற்போது மற்றுமோர் தாயார் 25 வார கர்ப்ப காலத்தில் பிரசவித்த குழந்தையும் சுகதேகியாக வைத்தியசாலையில் பராமரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.