இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதாக கூறும் 15 இளம் பெண்கள் - அதிர்ச்சியில் புலனாய்வு அதிகாரிகள்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதாக கூறும் 15 இளம் பெண்கள் - அதிர்ச்சியில் புலனாய்வு அதிகாரிகள்

File Photo
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட 24 வயது இளம் யுவதி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த வகுப்பில் தற்கொலைத் தாக்குதல் செய்வதாக சபதம் செய்த 15 பெண்கள் தான் கலந்து கொண்ட சஹ்ரானின் வகுப்பில் இருந்ததை குறித்த யுவதி வெளிப்படுத்தியுள்ளார்.

தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டமைக்காக மாவனெல்லை - ஹிங்குல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளம் யுவதி சிஐடி மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட யுவதி பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்.

இதேவேளை மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குறித்த யுவதியின் மூன்று சகோதரர்களும், தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post