30 வருடங்களாக மூடப்பட்டு காணப்படும் ஏறாவூர் புதிய சந்தையை மீளத் திறக்க நடவடிக்கை!

30 வருடங்களாக மூடப்பட்டு காணப்படும் ஏறாவூர் புதிய சந்தையை மீளத் திறக்க நடவடிக்கை!


முப்பது வருடங்களாக மூடப்பட்டு காணப்படும் ஏறாவூர் புதிய சந்தையை மீளத் திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹல் ஹக் தெரிவித்துள்ளார்.


குறித்த சந்தை ஏறாவூர் நகர சபைக்கு உட்பட்டு மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையருகே அமைந்துள்ளது.


அந்தச் சந்தையின் வியாபார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள, குத்தகை உரிமையினைப் பெற்றிருந்தவர்கள் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து வியாபாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பினால் உரிய ஆவணங்களுடன் வர்த்தமானப் பத்திரிகையின் அறிவித்தலுக்கமைய நகர சபைச் செயலாளரிடம் கையளிக்குமாறு அறிவித்துள்ளனர்.


இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் நகர சபைச் செயலாளரிடம் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே சந்தை வியாபாரிகள் இச்சந்தையில் ஏற்கெனவே தாங்கள் வியாபாரம் செய்ததை குறிப்பிடப்பட்ட காலப் பகுதிக்குள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்தத் தவறும்பட்சத்தில் அந்த சந்தையின் குத்தகை உரிமையினை இழந்தவராகக் கருதப்படுவதோடு குத்தகை உரிமம் தொடர்பான இழப்பிற்கு நகர சபை எவ்விதத்திலும் பொறுப்பாகாது எனவும் நகர சபைச் செயலாளர் தெரிவித்தார்.


$ads={1}


இச்சந்தையில் 1990ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மூவின மக்களும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


1990ஆம் ஆண்டு இப்பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத இன வன்முறைகளைத் தொடர்ந்து சந்தை நடவடிக்கைகள் முற்றாக முடக்கப்பட்டதுடன், ஏறாவூர் நகர சபை அலுவலகமும் முற்றாக சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post