கொரொனா தொற்று: 29 வயது இளைஞன் பஸ்ஸில் திடீர் மரணம்!

கொரொனா தொற்று: 29 வயது இளைஞன் பஸ்ஸில் திடீர் மரணம்!

கெகிராவை – மரதன்கடவல எவீரவெவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடந்த தினம் பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

பேருந்தினுள் குறித்த இளைஞன் மூச்சற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் உயிரிழந்து காணப்பட்டதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

29 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post