ஆறாவது மாடியில் இருந்து வீழ்ந்து 27 வயது யுவதி உயிர் பலி! மாதம்பிட்டியில் சம்பவம்!

ஆறாவது மாடியில் இருந்து வீழ்ந்து 27 வயது யுவதி உயிர் பலி! மாதம்பிட்டியில் சம்பவம்!


முகத்துவாரம் மாதம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் ஆறாம் மாடியிலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு மாதம்பிட்டி – ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் ஆறாம் மாடியில் வசித்து வந்த யுவதி இன்று (03) அதிகாலை 3 மணியளவில் இவ்வாறு வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.


ரன்தியவுயன தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


நீதிவான் விசாரணைகளையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-செ.தேன்மொழி

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.