20 ரூபா விசேட புதிய நாணயம் வெளியீடு! ஜனாதிபதியிடம் இன்று வழங்கிவைப்பு!

20 ரூபா விசேட புதிய நாணயம் வெளியீடு! ஜனாதிபதியிடம் இன்று வழங்கிவைப்பு!


இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.


இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும்.


நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது.


மேலும் மார்ச் 03 முதல் 05 மில்லியன் பெறுமதியான நாணயங்கள், நாட்டின் நாணய சுழற்ச்சியில் சேர்க்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post