17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று குடும்பம் நடத்தியவர் கைது!

17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று குடும்பம் நடத்தியவர் கைது!


சிறுமியைக் கடத்தி சென்று இரு மாதங்கள் குடும்பம் நடத்தினார் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனையடுத்து சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த 17 வயது சிறுமியை அராலி பகுதியை சேர்ந்த இளைஞரே கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.


$ads={1}


முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்து வந்த கொடிகாமம் பொலிஸார்  இளைஞனையும் சிறுமியையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார்  ஆஜர்படுத்தியபோது, இளைஞரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் சிறுமியை சீர் திருத்த பள்ளியில் சேர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post