1.7 பில்லியன் பெறுமதியான பயங்கரவாத எதிர்ப்பு வாகனங்கள் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்பு!

1.7 பில்லியன் பெறுமதியான பயங்கரவாத எதிர்ப்பு வாகனங்கள் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்பு!


இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு வாகனங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வு இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.


இந்த வாகனங்கள் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அன்பளிப்பு செய்த முதல் தொகுதி உபகரணங்கள் ஆகும்.


இந்நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் சி. விக்கிரமரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இன்று நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 1 பில்லியன் ஜப்பானிய யென்(1.7 பில்லியன் ரூபா) என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.