ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; தற்கொலை செய்துக்கொள்ள தயாரான பெண்கள் 15 பேரின் பெயர் விபரம் வெளியானது!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; தற்கொலை செய்துக்கொள்ள தயாரான பெண்கள் 15 பேரின் பெயர் விபரம் வெளியானது!


தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் முன் மதத்தின் பெயரில் எந்த நேரத்திலும் தற்கொலை செய்துக்கொள்ள தயாராக இருப்பதாக 15 பெண்கள் உறுதி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சஹ்ரானிடமிருந்து பயங்கரவாத பயிற்சி பெற்ற மாவனெல்லையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.


ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணொருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு சமீபத்தில் கைது செய்தது.


மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் மீதான தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் மற்றும் முகமது இப்ராஹிம் ஷாஹித் அப்துல் ஹக் ஆகியோரின் சகோதரியான 24 வயதான மொஹமட் இப்ராஹிம் ஜாஹிதா எனபவரே ஆவார்.


$ads={1}


தாக்குதலுக்கு ஒரு வாரம் கழித்து கம்பளை பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்கள் தற்போது பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ளனர்.


மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண், ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையிலே அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.


2018 ஆம் ஆண்டில் காத்தான்குடி பகுதியில் நடைபெற்ற சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத உரைகளில் அவர் உட்பட 15 பெண்கள் கலந்து கொண்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் உட்பட 15 பேரும் தங்கள் மதத்தின் பொருட்டு எந்த நேரத்திலும் தற்கொலைக்கு தயாராக இருப்பதாக சஹ்ரானுக்கு முன் சத்திய பிரகடனம் செய்ததாக அவர் ஒரு சர்ச்சைக்குரிய வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சாய்ந்தமருது பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறித்த 15 பேரில் 05 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.


$ads={1}


இந்நிலையில், குறித்த 15 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகின.


 1. சஹ்ரானின் அன்னை - அப்துல் சத்தார் சித்தி உம்மா 
 2. சஹ்ரானின் சகோதரி - மொஹமட் காசிம் ஹிதாயா
 3. மொஹமட் ஜெயினின் மனைவி ஆதம் லெப்பே பாத்திமா
 4. மொஹமட் ரில்வானின் மனைவி நஸ்ஹத் பாத்திமா நப்னா
 5. ஆசாதின் மனைவி பெரோசா


பொலிஸ் தடுப்பு காவலில் இருக்கும் பெண்கள்


 1. சஹ்ரானின் சகோதரி - மொஹமட் காசிம் ஹிதாயா 
 2. சாதிக் என்பவரின் மனைவி மொஹமட் பளீல் பாத்திமா சாஹிதா
 3. மொஹமட் மில்ஹானின் மனைவி மொஹமட் அஹமதுல்லா பாத்திமா ஜூஸ்தா


பயங்கரவாத புலனாய்வு பிரிவின் தடுப்புக்காவலில் இருக்கும் 07 பெண்கள்

 1. கபூர் மாமா என்பவரின் மனைவி உதுமாலெப்பே பர்சானா
 2. மொஹமட் ஹனிஃபா நுஸ்ரா
 3. மொஹமட் மில்ஹானின் மனைவி ஸாலிஹ் ஜூபைதியா
 4. காத்தான்குடி தாருல் அதர் பள்ளிவாயலின் தலைவர் ரவூப் என்பவரின் புதல்வி பாத்திமா சாரா
 5. காத்தான்குடி தாருல் அதர் பள்ளிவாயலின் தலைவர் ரவூப் என்பவரின் மனைவி சித்தி சாதுனா
 6. காத்தான்குடி பகுதியை சேர்ந்த செய்யது அஹமது அஸ்மியா
 7. கடந்த தினம் கைது செய்யப்பட்ட 24 வயது பெண் மொஹமட் இப்ராஹிம் சாஹிதா


இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய குழு இன்று பல தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எம்.எம் அஹமத்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.