இன்று ETI நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மூன்று பேர் மீண்டும் கைது!

இன்று ETI நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மூன்று பேர் மீண்டும் கைது!

ETI நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைக்கேடு தொடர்பில், நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

$ads={2}

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபருமாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதில் மூன்று பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது

எவ்வாறாயினும், குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த மூன்று பேரும் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post