இந்தியாவின் உற்பத்தியான Covishield தடுப்பூசியை இலங்கையில் பெற்றுத்தர அவசர அனுமதி வழங்க முடியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவின் உற்பத்தியான Covishield தடுப்பூசியை இலங்கையில் பெற்றுத்தர அவசர அனுமதி வழங்க முடியும்!

இந்திய உற்பத்தியான கொரொனா தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் தேவையான அனுமதியை வழங்க முடியும் என தேசிய ஒளடத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்திய கொரொனா தடுப்பூசி கடந்த 19ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் கமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசியின் பக்கவிளைவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Oxford-AstraZeneca நிறுவனத்தினால் மேம்படுத்தப்பட்ட Covishield தடுப்பூசியை இந்தியாவின் பாரிய நிறுவனமான Serum Institute உற்பத்தி செய்கிறது.

இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அவசர அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன், அத்தகைய அனுமதியை பெறுவதற்கு அரசாங்கத்தின் பரிந்துரையும் தேவைப்படுகிறது.

பிரித்தானியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சீஷெல்ஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு தற்போது Covishield தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்கிறது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.