பொலிஸ் நிலையம் சென்ற குற்றவாலிக்கு கொரோனா - பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பொலிஸ் நிலையம் சென்ற குற்றவாலிக்கு கொரோனா - பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமைக்காக உடுகம பொலிஸ் நிலையத்திற்கு வந்ததையடுத்து உடுகம பொலிஸ் ஓ.ஐ.சி, பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உடுகம சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார். 

கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த நபர் கொழும்பில் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணிபுரியும் இவர் உடுகம தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.


$ads={2}

பி.சி.ஆர் முடிவுகளைப் பெறுவதற்கு முன்னர், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக அண்டை வீட்டாரால்  குற்றம் சாட்டி நேற்று (21) பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டார்.

பொலிஸ் அதிகாரி இந்த புகாரை விசாரித்து நிலையத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். 

இதனையடுத்த்ய், ஓ.ஐ.சி, போலீஸ் சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post