புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள CIMA தொழில்சார் தகைமை இணையவழி கல்வி முறைமை!

புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள CIMA தொழில்சார் தகைமை இணையவழி கல்வி முறைமை!


CIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக இணையவழி கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இலங்கையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.


தொழில்சார் கணக்காளர்களின் சங்கம் இந்த கல்வி முறைமையினை கடந்த வருடம் இறுதியில் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் ஆரம்பித்தது.


இந்நிலையிலே, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இணையவழி கல்வி முறைமையினை அண்மையில் ஆரம்பித்து வைத்தது.


$ads={2}

இந்த நிகழ்வில் தொழில்சார் கணக்காளர்கள் சங்கத்தின் உலகளாவிய சந்தைகள் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் Irene Teng, CIMA தேச முகாமையாளர் Zahara Ansary, LSEG இன் பணிப்பாளரும் தலைமை நிதி உத்தியோகத்தருமான Fadhil Jiffry ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், தொழில்சார் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்துவதில் CIMA மீண்டும் ஒரு தடவை புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக CIMA மாணவர் சங்கத் தலைவர் ஷெஹான் சேனாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post