தாய் நாட்டுக்கு புகழ் சேர்த்த மேலுமொரு மாணவி; கல்முனை பாத்திமா ஷைரீன்! -ஏ.பி.எம். அஷ்ரப்

தாய் நாட்டுக்கு புகழ் சேர்த்த மேலுமொரு மாணவி; கல்முனை பாத்திமா ஷைரீன்! -ஏ.பி.எம். அஷ்ரப்


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்ற மாணவியான பாத்திமா ஷைரீன், சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்துள்ளார்.


2020 ஜனவரி, 13 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி, 16 ஆம் திகதி வரை சர்வதேச விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தோனேஷியாவின் ஜாவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 24 நாடுகளுள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய பாத்திமா ஷைரீன் முதலிடம் பெற்று தங்க விருதை வென்றுள்ளார்.


இம்மாணவியின் வெற்றி இலங்கை தாய் நாட்டிற்கான வெற்றியாகும்; முஸ்லிம் சமூகம் பெண்களின் கல்வியில் தடை விதிக்கவில்லை என்பதனை தெளிவுபடுத்தும் இன்னுமொரு சாட்சியாகும்.


இம்மாணவியின் சாதனையை மனப்பூர்வமாக பாராட்டுவதோடு, இவரது எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்! 


ஏ.பி.எம். அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

27.01.2021


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post