BREAKING : பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING : பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

நீதிமன்றத்திற்கு அவமதிப்பு செய்த காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவருக்கு எதிராக இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சிசிர த ஆப்ரூ, விஜித் மல்கொட மற்றும் பிரிதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று காலை இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கையில் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல் மிக்கவர்கள் என கூறியிருந்தார்.

இதன் மூலம் ரஞ்சன் ராமநாயக்க நாட்டின் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Updated at 12pm

கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட தனிமைபடுத்தலுக்காக இளைஞர் குற்றவாளிகளுக்கான திருத்த மையத்திற்கு மாற்றப்பட்டார்!


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.