
டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டு வெடிப்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது