கொரோனா அச்சம் - சுகாதார வழிமுறைகளின் கீழ் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பின்னர் திருமண தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா அச்சம் - சுகாதார வழிமுறைகளின் கீழ் நடைபெற்ற திருமண நிகழ்விற்கு பின்னர் திருமண தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ், பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கு சுகாதார வழிகாட்டல்களின் கீழ் இன்று (23) திருமண நிழவு இடம்பெற்றது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், பொலிஸாரின் பாதுகாப்புடன் பொதுச் சுகாதார பரிசோதகர் கண்காணிப்பில் அங்குள்ள கோவிலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டிருந்தார். 

அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண் ஒருவருக்கு இன்றைய தினம் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய (23) திருமண நி்கழ்வு தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இதனைத் திருமணமான இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post