“அறிவியல் முறைகளை தான் நாம் பின்பற்ற வேண்டும் - புராண நம்பிக்கைகளை அல்ல” டாக்டர் அனில் ஜாசிங்க

“அறிவியல் முறைகளை தான் நாம் பின்பற்ற வேண்டும் - புராண நம்பிக்கைகளை அல்ல” டாக்டர் அனில் ஜாசிங்க

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை விட அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் சுகாதார இயக்குநர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இப்போது சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக கடமை புரியும் டாக்டர் ஜாசிங்க இந்த கருத்துக்களை நேற்று தெரிவித்தார்.


$ads={2}

நாட்டில் சிலர் அறிவியல் முறைகள் இருந்தபோதிலும் அவற்றை பின்பற்றாமல், புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள். மேலும், இலங்கையர்களாகிய நாம் இதனை செய்ய வேண்டும், புராண நம்பிக்கைகளை பின்பற்றுது உகந்ததல்ல, விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது என வைத்தியர் அனில் ஜாசிங்க டேலி மிரர் ஆங்கில பத்திரிகைக்கு தெரிவித்தார்

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம் நாட்டில் சிலர் விஞ்ஞான முறைகளில் தங்கள் மத நம்பிக்கையை உட்புகுத்துகிறார்கள், மற்றும் சில குழுக்கள் பல அறிவியல் முறைகள் இருந்தபோதிலும், புராண நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்வாண்டின் முதல் பாதியில் இலங்கையின் 20% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை உலக சுகாதார அமைப்பிலிருந்து இலவசமாக பெறவிருப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post