என்னை இன்னும் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லவில்லை! நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி!

என்னை இன்னும் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லவில்லை! நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி!


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நிர்வாக தாமதங்களால் தன்னை இன்னும் சுகாதார அதிகாரிகள் கிசிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லவில்லை என கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


பேராதனை - கிரிபத்கும்புர பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் கண்டு கிசிச்சை நிலையங்களிற்கு அனுப்புவதில் தாமதங்கள் காணப்படுகின்ற இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாதிரியை ஒருநாள் எடுத்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் பட்டியை பல நாட்களின் பின்னர் வெளியிடுவதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றேன் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post