கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் டென்னிஸ் பந்துக்களில் போதைப்பொருள்!

கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் டென்னிஸ் பந்துக்களில் போதைப்பொருள்!

வெலிகந்த – கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு டென்னிஸ் பந்துகள் மீட்கப்பட்டுள்ளன.


இரண்டு பந்துகளிலிருந்தும் கஞ்சா, ஹெரோயின் மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஒரு குழு அல்லது நபரினால் திட்டமிட்டு நேற்றைய முன்தினம் இரவு கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் போதைப்பொருள் அடங்கிய பந்துகள் இரண்டும் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


இராணுவம் மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post