எவர் எதிர்த்தாலும் துறைமுகத்தை இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானுக்கு வழங்குவதில் மாற்றம் இல்லை! நிமல் லன்சா

எவர் எதிர்த்தாலும் துறைமுகத்தை இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானுக்கு வழங்குவதில் மாற்றம் இல்லை! நிமல் லன்சா


யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முதலீட்டுத் திட்டத்திற்காக இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று (24) கெரவலபிட்டியவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,


கிழக்கு முனையத்தை முதலீட்டுத் திட்டத்திற்கு வழங்குவோம் என்பதை தௌிவாகக் கூறுகின்றேன். திருட்டுத்தனமாக அன்றி வௌிப்படையாகக் கூறுகின்றேன்.


நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று, ஒவ்வொருவரின் தேவைக்காகப் பேசுவோர் உள்ளனர். எமது துறைமுகம் தற்போது 25ஆவது இடத்திலுள்ளது. நாம் 13ஆவது இடத்திற்கு வருவோம். கிழக்கு முனையத்தை முதலீட்டுத் திட்டத்திற்காக இந்திய நிறுவனத்திற்கும் ஜப்பானுக்கும் வழங்குவோம். 


இந்தியாவிற்கு மாத்திரமல்ல முதலீட்டுத் திட்டத்திற்காக நாளை அமெரிக்கா கோரினாலும் சீனா கோரினாலும் எவர் கோரினாலும் வழங்குவோம். அப்படிச் செய்தால் மாத்திரமே தொழிற்துறைகள் மேம்படும். ஒவ்வொருவரின் கருத்துக்களுக்குப் பயந்து நாம் தீர்மானங்களை எடுக்க மாட்டோம் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post