வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலா? அரசாங்க இலவச தனிமைப்படுத்தலா? - இராணுவ தளபதி

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தலா? அரசாங்க இலவச தனிமைப்படுத்தலா? - இராணுவ தளபதி

வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் கட்டாயமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


$ads={2}

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்து இலங்கை பிரஜைகளும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபட விரும்புவோருக்கு மாத்திரமே, கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post