நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் முழு விபரம்

நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் முழு விபரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 30 பேர் நாரஹேன்பிட்ட இனங்காணப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் 148 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் மாவட்டத்தில், 30 பேர் நாரஹேன்பிட்டவிலும், 14 நபர்கள் பொரளையிலும், 15 நபர்கள் ப்ளுமெண்டலிலும், 16 நபர்கள் மட்டக்குலியிலும், 22 நபர்கள் அவிசாவெல்லையிலும் பதிவாகொ இருந்தனர்.


$ads={2}

ஒக்டோபர் 4 முதல் கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,763 ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 535 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் 148 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், 111 பேர் கண்டியைச் சேர்ந்தவர்களும், 64 பேர் கேகாலையை சேர்ந்தவர்கள் மற்றும் 212 பேர் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

நேற்று நாட்டில் 17,217 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post