நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்; பகரமாக நியமிக்கப்படவுள்ள நபர் இவர்தான்!

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்; பகரமாக நியமிக்கப்படவுள்ள நபர் இவர்தான்!


நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கவுள்ளார்.


அவருக்கு மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லாததால், அவரது உறுப்புரிமை இழப்பது உறுதியானது என தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க, கடந்த நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 04 பேர் தெரிவாகினர்.


இந்நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும, புதிய நாடாளுமன்ற உறுப்பினராகுவார் என அறியக்கிடைத்துள்ளது.


கம்பஹாவில் ஐக்கிய மக்கள் சக்தி விருப்பு வாக்கு விபரம் வருமாறு,


சரத் ​​பொன்சேகா – 110,555

ரஞ்சன் ராமநாயக்க – 103,992

ஹர்ஷன ராஜகருணா – 73,612

கவிந்த ஜயவர்தன – 52,026

அஜித் மன்னப்பெரும - 47,212


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post