கொழும்பில் அன்றாட கொரோனா நிலவரத்தில் மாற்றம்!

கொழும்பில் அன்றாட கொரோனா நிலவரத்தில் மாற்றம்!

கொழும்பு மாநகர சபை எல்லையில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த ரீதியில் மதிப்பிடும் போது நான்கிற்கு ஒரு நோயாளர் என்ற வகையில் குறைவடைந்துள்ளதாக ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.


$ads={2}

இதற்கு முன்பு கொழும்பில் அன்றாடம் 375 முதல் 400 நோயாளர்கள் வரை பதிவாகினர். எனினும் தற்போது 90 முதல் 100 நோயாளர்கள் வரையே பதிவாகின்றனர் என அவர் மேலும் கூறினார்.

நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்றும் ஆனால் அதனூடாக கொழும்போ ஏனைய நகரங்களோ அபாயமற்றவை என்று அர்த்தமல்ல. நோய் அறிகுறியின்றி நோயாளர்கள் இருக்கின்றமையே அதற்குக் காரணமாகும் எனவும் ருவன் விஜயமுனி சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் மாநக சபை எல்லையில் சில இடங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post