கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை - நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தலுக்கு!

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை - நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தலுக்கு!

கம்பஹா மாவட்டத்தில் 200 கொரோனா தொற்றாளர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் நேற்று பிற்பகல் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார வட்டாரங்களை மேற்கோளிட்டு லங்காதீப செய்தி பத்திரிகை தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் இல்லாததால் நோயாளிகள் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பரிதாப நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.


$ads={2}

இத்தொற்றாளர்கள் அனைவரும் கடந்த மாதம் 18 ஆம் திகதிக்கு பிறகு இனங்காணப்பட்டவர்களாவர்கள்.

இதுதொடர்பாக, தொற்றாளர்கள் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் இடம் கிடைக்கும் போது இடமாற்றம் செய்யப்படுவார்கள் என கம்பஹா மாவட்ட பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post