கட்டாய தகனம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை! -இலங்கை அரசு

கட்டாய தகனம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை! -இலங்கை அரசு


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள நிலையில், தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கருத்துரைக்கும் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறைகளையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post