எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை!

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை உயர்வால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) இழப்பு ஏற்படுவதாக தான் அமைச்சரவையில் தெரிவித்ததாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


$ads={2}

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

“நான் எரிபொருள் விலையை அதிகரிக்க அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 58 டொலரை தாண்டியுள்ளதால், CPC ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 இழக்கிறது என்று நான் சொன்னேன்.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் கஜானா (Treasury) பெட்ரோலியம் மீதான வரிகளை குறைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நான் சுட்டிக்காட்டினேன். ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் தற்போது விதிக்கப்படும் வரியின் அளவையும் சுட்டிக்காட்டினேன்.

இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது என்பதால் கஜானாவினால் விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். அது உண்மையில் எனது குறிக்கோளாக இருந்தது”

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post