
முகப்புத்தகத்தின் ஊடாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் பதிவுகளை பதிவிட்ட குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நபரை இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$ads={2}
பஸால் முஹம்மத் நிசார் எனும் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கொழும்பு பிரதான நீதவான் முஹம்மத் மிஹார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.