நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் செல்லலாம்!

நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் செல்லலாம்!


தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிகள் காரணமாக தொற்று நோயின் பரவல் குறையும் என்று பொருளாதாரம் தொடர்பான லண்டன் பள்ளியின் உலக சுகாதார கொள்கை உதவி பேராசிரியர் வைத்திய கலாநிதி கிளேர் வென்ஹம் இதனை தெரிவித்துள்ளார்.


உலக சனத்தொகை பாதுகாக்கப்படும் வரை கொரோனா தொற்று நோயின் பரவல் முடிவடையாது என்று அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக வழங்கி முடிப்பதற்கு 2023-2024ஆம் ஆண்டு வரை செல்லக்கூடும்.


இது நீண்ட காலம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் வழமைக்கு திரும்பாது என்று கிலேர் வென்ஹம் குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானியாவில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் எல்லை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கிலேர் வென்ஹம் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.