உலகம் முழுவதும் உடல்கள் தகனம் செய்யப்படுவதாலேயே நிபுணர் குழு முடிவின் அடிப்படையில் தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது! - ஜானக வக்கும்புர

உலகம் முழுவதும் உடல்கள் தகனம் செய்யப்படுவதாலேயே நிபுணர் குழு முடிவின் அடிப்படையில் தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது! - ஜானக வக்கும்புர


சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் நிபுணர் குழுவொன்றின் முடிவின் அடிப்படையில் உடல்களை தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


இதன் காரணமாக நிபுணர் குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே உடல்களை தகனம் செய்யும் முடிவு மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடகாலமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post