
தரம் ஒன்றுக்கான பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை பெப்ரவரி இரண்டாம் வாரத்துக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (04) தெரிவித்தார்.
$ads={2}
ஜனவரி இரண்டாம் வாரத்தில் மாணவர்களைச் சேர்ப்பது விதிமுறையாக இருந்த போதிலும் தற்போதுள்ள கொரோனா தொற்றுநோயால் இவ்வாண்டு அவ்வாறு இருக்காது என்றார்.
மேலும் இந்த முடிவுக்கு சில பாடசாலைகளில் முன்னைய கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாததும் மற்றொரு காரணி என்றும் அமைச்சர் கூறினார்