வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வாட்ஸாப் தனது சேவை விதிமுறைகளுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான பிப்ரவரி 08 எனும் காலக்கெடுவை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

தனியுரிமை குறித்த கவனத்தில் வாட்ஸாப் பயனர்கள் சேவையிலிருந்து விலகி, போட்டியாளர்களான டெலிகிராம் மற்றும் சிக்னலுக்கு திரண்டதால், வாட்ஸாப் நேற்று (15) பேஸ்புக் உடனான தரவு பகிர்வு மாற்றத்தை தாமதப்படுத்தியது.

$ads={2}

“விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளும்படி மக்கள் கேட்கப்படும் திகதியை நாங்கள் இப்போது பிற்போட்டு வருகிறோம்” என்று வாட்ஸாப் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களின் தெரிவித்துள்ளது.

அதன்படி, பேஸ்புக் சேவையகங்களுடன் தரவைப் பகிர்வது சம்பந்தமாக, அதன் சேவை விதிமுறைகளுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான பிப்ரவரி 08 காலக்கெடுவை வாட்ஸாப் ரத்து செய்தது.

அதற்கு பதிலாக “மே 15ஆம் திகதி வரை புதிய வணிக சேவை விதிமுறைகளை பயனர்கள் படிப்படியாக மதிப்பாய்வு செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இது தொடர்பாக நாம் எந்த வாட்ஸாப் கணக்குகளையும் ஒரு போதும் நீக்கப் போவதில்லை" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post