
இந்த தகவலை சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ளது.
உடல்கள் தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்கின்ற விவகாரத்தில் சுகாதார அமைச்சினால் முதலாவதாக நியமிக்கப்பட்டிருந்த குழு, தகனம் செய்வதே சிறந்தது என்பதை பரிந்துரைத்திருந்தது.
$ads={1}
எனினும் அதற்கெதிராக பல வழிகளிலும் போராட்டங்களும், எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டிருப்பதால் இரண்டாவது நிபுணர் குழுவையும் அமைச்சு நியமித்தது.
இந்த நிலையில் குறித்த குழு தற்சமயம் பரிந்துரையை அமைச்சிடம் நேற்று வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில், தகனம் செய்தல் மற்றும் புதைத்தல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்க முடியும் என்கிற பரிந்துரை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்விரு குழுவினரையும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று சந்தித்த போதிலும் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.