அமெரிக்க வெள்ளை மாளிகையில் வன்முறை : ஊரடங்கு உத்தரவினால் மேலும் பரபரப்பு!!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வன்முறை : ஊரடங்கு உத்தரவினால் மேலும் பரபரப்பு!!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் 306 இடங்களில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஜனவரியில் பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காகாவில் அதிபராவதற்கு எல்க்டோரெல்க் கொலேஜ் அங்கீகாரமும் அவசியமானது.

இந்நிலையில், ஜோ பிடனின் வெற்றியை முறையாக அறிவிப்பதற்கான சான்றிதழ் வழங்கும் பணி அமெரிக்க காங்கிரஸ் தலைமையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் ஜோபிடன் அதிபராக பதவியேற்ற எந்த தடையும் இல்லை என அமெரிக்க காங்கிரஸின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்தார்.


$ads={2}

மேலும் ஜோபிடன் வெற்றியை எதிர்த்துஆதிபர் ட்ரம்ப் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் நீதிமன்றதில் ரத்து செய்ய்ப்பட்டது. இதனால் ஜோபிடன் பதவியேற்க சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என்ற நிலையில், நேற்று திடீரென வெள்ளை மாளிகையில் குவிந்த ட்ரம்ப் ஆதராவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த ஆர்பாட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தடுப்புகளை உடைத்து கட்டிடத்தின் உள்ளே நுழைந்து அலுவலக அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட எம்பிக்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சில செனட் உதவியாளர்களின் அலுவலக கதவுகளை தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களை அவதூறாகக் பேசி கூச்சலிட்டனர்.

இதனால் பாதுகாப்பு இல்லை என கருதிய அதிகாரிகள் அங்கிருந்தவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளியே வந்த உதவியாளர்கள் எலக்ரோ கொலேஜ் சான்றிதழ்கள் அடங்கிய பெட்டிகளை தங்களதுடன் பாதுகாப்பாக எடுத்து வந்துவிட்டனர். இந்த பெட்டி ஆர்பாட்டகார்ர்கள் கையில் கிடைத்திருந்தால், அவர்கள் இந்த பெட்யை எரித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளை மாளிகையின் சுரங்கங்கள் வழியாக, சம்பவ இடத்திற்கு வந்த ஆயுத ஏந்திய போலீஸ், செனட் அறையில் இருந்த ஆர்பாட்டகாரர்களை வெளியேற்றும்படி அறிவுறுத்தினர். ஆனால் போலீசாரின் அறிவிப்பை ஆர்பாட்டகார்ர்கள் பொருட்படுத்தாதை தொடர்ந்து,போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதில் ஒரு பெண் குண்டு தாக்கி உயிரிழந்தார்.

மேலும் ஆர்பாட்டகார்ர்களை வெளியேற்ற கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனையடுத்து ஆர்பாட்டங்கள் கலைக்கப்பட்ட நிலையில். வெள்ளை மாளிகை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அவர்கள் அறையில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்தவுடன் ஊழியர்கள் அனைவரும் சக ஊழியர்களிடம் நலம் விசாரித்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் ஏராளமான கதவுகள் படிக்கட்டுகள், தொலைபேசிகள் ஆகியவை சேதமடைந்தன.

மேலும ஊழியர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கேபிடல் வளாகத்தில் உள்ள மற்றொரு பாதுகாப்பான இடத்தில் கூடிய அதிகாரிகள், எலக்ரோ கொலேஜ் எண்ணிக்கையை எவ்வாறு தொடரலாம், எப்படி தொடரலாம் என்பது குறித்து விவாதித்தனர். மேலும் எங்கள் வேலையைச் செய்ய எந்த தடை வந்தாலும் அதை தாக்குவதற்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. ”

இந்த சம்பவம் தொடர்பாக தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post