இப்படி மோதிக்கொண்டே பிரிந்திருப்பதா? இல்லை ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா? அலி சப்ரி நாடாளுமன்றில் கேள்வி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இப்படி மோதிக்கொண்டே பிரிந்திருப்பதா? இல்லை ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா? அலி சப்ரி நாடாளுமன்றில் கேள்வி!


இப்படி ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா? ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். பழைய விடயங்களை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 


$ads={2}


பாராளுமன்றத்தில் இன்று (06) நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலங்களை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 73 வருடங்கள் ஆகின்றன. இந்தப் பகுதியில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றாக இருந்து ஒற்றுமையைக் காண தவறிவிட்டோம்.


உலகில் பல நாடுகள் இன மத பிரதேச அடிப்படையில் பிரிந்து இருந்தன. பின்னர் அவற்றிலிருந்து பாடம் கற்றனர். 73 ஆண்டுகள் கடந்தும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான வேறுபாடு குறைந்ததாக தெரியவில்லை.


வேறுபட்ட இனத்தை மதத்தை சேர்ந்தவராக இருப்பதாலோ வேறுபட்ட மொழியைப் பேசுவதால் எதிரிகள் ஆகிவிடுவதில்லை. 


வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும்  வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தகாலத்தை திரும்பிப்பார்த்தால் அனைவரும் தவறு  செய்த  இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.


1958,1978 கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு, 1983 கலவரம், கபதிகொள்ளவா தாக்குதல், காத்தான்குடி தாக்குதல். அண்மையில் இடம்பெற்ற சஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன.


சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது  என்பது தவறான வழியைத் தான்காட்டும். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும். 


இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான தலமாக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் இடமாக  இந்தப் பாராளுமன்றம் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் சுமுகமாக அமையாது.


சில ஊடகங்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயல்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்தில் ஹிட்லர் நடந்து கொண்ட விதமும் இன்று சில ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதமும் வேறுபட்டவை அல்ல .


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று இந்தத் தாக்குதல் உடன் தொடர்பு இல்லாத எவருக்கும் தண்டனை வழங்கப்பட கூடாது என்பதிலும் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்


$ads={2}


மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும்  திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும் . புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


எல்லா சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றார்.


-ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.