எந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது! -மெல்கம் கர்தினால் ரஞ்சித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது! -மெல்கம் கர்தினால் ரஞ்சித்


கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கருத்து வெளியிட்டார்.


$ads={2}


சரியானதையும் பிழையானதையும் செய்வதற்கு எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதோ, எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதோ, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது என இதன்போது கொழும்பு பேராயர் கூறினார்.


உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். எனினும், சத்தமிடுவதால் உண்மை பொய்யாகிவிடாது என பேராயர் வலியுறுத்திக் கூறினார்.


கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது அச்சமின்றி தைரியமாகப் பேசுவது என சுட்டிக்காட்டிய பேராயர், தாம் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.


நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என கூறிய கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மக்களின் மனிதாபிமான முன்னேற்றத்தை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டியது தலைமைத்துவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் என கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.