அடுலுகம உட்பட மேலும் பல பகுதிகள் விடுவிப்பு!

அடுலுகம உட்பட மேலும் பல பகுதிகள் விடுவிப்பு!

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டம் – பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.

  1. 659 இ போகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  2. 659 சி பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  3. கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  4. கொரவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  5. 660 பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  6. அடுலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  7. அடுலுகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  8. எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, 
  9. கல்கெமன்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
அத்துடன், இரத்தினபுரி மாவட்டம் – எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

நாளை அதிகாலை 5.00 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post