மன்னார் பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பு!

மன்னார் பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பு!

மன்னார் - எருக்கலம்பிட்டி பகுதியில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

$ads={2}

குறித்த பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 172 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், ரேபிட் ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைக்கு சுமார் 300 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குடும்பத்தின் முதல் பாதிக்கப்பட்ட நபர், எருக்கலம்பிடி பகுதியில் வசிப்பவர் எனவும், புத்தளத்திலிருந்து வந்திருந்த நிலையில் அவருக்க தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்தும் குடும்பத்தின் மற்ற நான்கு பேரும் வைரஸால் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post