ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் கொரோனா தாக்கம்; ஒருவருக்கு தொற்று உறுதி!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் கொரோனா தாக்கம்; ஒருவருக்கு தொற்று உறுதி!


ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த ஊழியருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


இதனை அடுத்து குறித்த ஊழியருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு இன்றைய தினம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எனினும், குறித்த ஊழியருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்களுக்கு மெற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனைகளின் மூலம் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை, அத்தியாவசியமான ஊழியர்கள் மாத்திரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் ஏனைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post