கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

கொரோனா தொற்றுக்குள்ளான பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மருத்துவர் தற்போது கராபிட்டிய் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாடிய GMOA துணை செயலாளர் டாக்டர் நவின் டி சொய்சா தெரிவித்தார்

அவரது சிகிச்சையை தீவிரப்படுத்த கராபிட்டிய் போதனா வைத்தியசாலையுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

இதுபோன்ற நிகழ்வுகளின் போது தீவிர சிகிச்சை பிரிவுகள் சில நேரங்களில் போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


அரசு, சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post