இலங்கையில் வாழும் பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த உயரிய பதக்கம்!

இலங்கையில் வாழும் பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த உயரிய பதக்கம்!

இலங்கையில் வசிக்கும் பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு விலங்கு நலனுக்கான சேவைகளுக்காக பிரிட்டிஷ் பேரரசு (British Empire) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Dogstar அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சமந்தா கிரீன், விலங்கு நலனுக்காக அவர் செய்த சேவைகளுக்காக பிரிட்டிஷ் பேரரசு (British Empire) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பல உள்ளூர் நாய்களுக்கு ஒட்டுண்ணிகள் இருப்பதைக் கவனித்த சமந்தா 2005ஆம் ஆண்டில் இலங்கையில் தனது பணியைத் தொடங்கினார்.


$ads={2}

Dogstar அறக்கட்டளையை அபிவிருத்தி செய்வதற்காக 2013ஆம் ஆண்டில் தனது கணவருடன் அவர் இலங்கைக்கு குடிபெயர்ந்தார்.

அத்துடன், தெரு நாய்கள் மற்றும் பூனைகளுக்காக உலகப் புகழ்பெற்ற கருத்தடை திட்டத்தை அமைத்தார்.

Dogstar அறக்கட்டளை இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு கருத்தடை மேலாண்மை திட்டத்தை வழங்குவதற்காக ஒரு மொபைல் கருத்தடை கிளினிக்கை செயற்படுத்தியுள்ளது. அத்துடன், விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசிகளையும் வழங்குகிறது.

Dogstar அறக்கட்டளை இப்போது 49,000க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை கருத்தடை செய்துள்ளது. 67,000க்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளது. பல நாய்களுக்கு நோய் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளித்துள்ளது.

Dogstar அறக்கட்டளை உள்ளூர் சமூகங்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது, மேலும் உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது, அவர்களுக்கு பயிற்சி மற்றும் அனுபவத்தை வழங்குகிறது.

ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பில் பொது சுகாதார ஆய்வாளர்களை ஆதரிக்கும் கம்பஹா சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்து Dogstar அறக்கட்டளைசெயல்படுகிறது.

தனக்கு பதக்கம் வழங்கப்பட்டமை குறித்து சமந்தா கிரீன் கருத்து வெளியிடுகையில்,

“என்னைப் போலவே விலங்கு நலனில் ஆர்வமுள்ள ஒரு பரந்த குழுவின் ஒரு பகுதியாக நான் செய்யும் பணிக்கான அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

இது 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான மற்றும் மேம்பட்ட தொடக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post