இலங்கையர்களை அழைத்து வருவதில் ஊழல் − தகவல் வெளியானது!

இலங்கையர்களை அழைத்து வருவதில் ஊழல் − தகவல் வெளியானது!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கையின் பின்னணியில், மாபியா செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொகையான பணத்தை செலவிட்டு, நாட்டிற்கு அழைத்து வரப்படும் இலங்கையர்களிடம், மீண்டும் பெருமளவிலான பணத்தை அறவிட்டு, அவர்களை நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிடமிருந்து, சிலர் பணத்தை சூரையாடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடொன்றிலிருந்து ஒருவர் நாட்டிற்கு வருகைத்தந்து, அவர் தனது வீட்டிற்கு செல்லும் போது, சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

இவ்வாறான செயற்பாடானது, பாரிய அநீதி எனவும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post