நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் பலத்த கட்டுப்பாடுகளுடன் திறப்பு!

நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் பலத்த கட்டுப்பாடுகளுடன் திறப்பு!

விமான நிலையங்கள் நாளை வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப் படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுருந்தது.


$ads={2}

எனினும் முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை (21) முதல் சுற்றுலாப் பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படவுள்ளதாக பிரசன்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டுக்குப் பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post